இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்

திருமருகலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடந்தது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
Published on

திட்டச்சேரி:

திருமருகலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட பொருளாளர் பாபுஜி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சரபோஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் வரவேற்றார்.கூட்டத்தில் திருமருகல் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திரட்டப்பட்ட நிதியான ரூ.2 லட்சத்தை திருமருகல் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், மாவட்ட துணை செயலாளர் பாஸ்கரிடம் வழங்கினார். இதில் ஒன்றிய அமைப்புசாரா செயலாளர் பக்கிரிசாமி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் மாசிலாமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com