இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்

கொரடாச்சேரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
Published on

கொரடாச்சேரி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சி கொரடாச்சேரி ஒன்றிய நிர்வாகக்குழு மற்றும் கிளை செயலாளர்கள் கூட்டம் ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் கவிதா தலைமையில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் கேசவராஜ், ஒன்றிய செயலாளர் சிவானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இளைஞர் மன்றம் சார்பில் வருகிற 28-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) எங்கே எனது வேலை என்று முழக்கத்தோடு கொரடாச்சேரிக்கு வரும் பிரசார பயணக்குழுவுக்கு வரவேற்பு அளிப்பது, விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் டெல்லியில் நடைபெறும் முற்றுகை போராட்டத்தில் கொரடாச்சேரி ஒன்றியத்தில் இருந்து ஏராளமானோர் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com