இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. .
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
Published on

சென்னை, 

சென்னை தியாகராயர் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் திடீரென நேற்று இரவு 9 மணி அளவில் மர்ம நபர்கள் பாட்டில் , கற்கள் போன்ற பொருட்களை வீசி தாக்கியுள்ளனர். அந்த சமயம் கட்சி அலுவலகத்திற்குள் யாரும் இல்லாத காரணத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை தேடும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி, சம்பவம் நடந்தபோது  அலுவலகத்தில் யாரும் இல்லை. எனவே எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் 24 மணிநேரமும் காவல்துறை தொடர் பாதுகாப்பு அளித்து, இங்கே இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் , என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com