இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வேலைவாய்ப்புகளை உருவாக்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

கூடலூர்

விவசாயிகள், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கூடலூர் பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் முகமது கனி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் போஜராஜ் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என கோஷம் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட குழு உறுப்பினர் குணசேகரன், உசைன், ரவிக்குமார், மகேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மேலும் மத்திய அரசுக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com