இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு நகரச் செயலாளர் சரோஜா தலைமை தாங்கினார்.

கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்று போன்ற பல்வேறு சான்றுகள் வழங்குவதற்கு லஞ்சம் வாங்குவதை தடுக்க வேண்டும். லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவில்பட்டி தாலுகாவில் உள்ள தகுதியான ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி, அதனை கிராம கணக்கில் பதிவு செய்ய வேண்டும். கோவில்பட்டி பிரதான சாலையில் இலவச சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும். அரசு மருத்துவமனையில் பெண்களுக்கள் சுகாதார வளாகத்துக்கு கதவுகள் பொருத்த வேண்டும். நீதிமன்ற வளாகத்தில் பூட்டி கிடக்கும் கழிப்பிடத்தை திறக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com