சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து 14ம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து 14ம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அழுத்தத்திற்கு அடி பணிந்து, ரஷ்ய நாட்டிலிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வந்ததை மோடி அரசு நிறுத்தியது. இப்போது மேற்காசிய போர் பதற்றத்தால் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், 30 நாட்களுக்கு மட்டும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் அனுமதி கேட்டு, நாட்டின் இறையாண்மையை கை விட்டுள்ளது மோடி அரசு.

தற்பொழுது வீட்டுப் பயன்பாடு மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை உயர்த்தியதுடன், தீவிர கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இது குடும்பத் தேவைகளுக்கு மீண்டும் விறகு தேடும் நிலைக்கு மக்களை தள்ளி விடுவதுடன், கள்ள சந்தை வணிகத்தை ஊக்கப்படுத்தி வருகிறது. வணிக நிறுவனங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் உணவகங்கள், தேனீர் கடைகள் உள்ளிட்ட நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், உயர்த்தப்பட்ட விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தட்டுபாடு இல்லாமல் சமையல் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்ய மத்திய பாஜக அரசை வலியுறுத்தியும் வரும் 14.03.2026 சனிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

வடசென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகே 14.03.2026 அன்று காலை 10.30க்கு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கலந்து கொள்கிறார். மத்திய சென்னையில் முன்னாள் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன், தென் சென்னையில் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, கரூரில் மாநில துணைச் செயலாளர் எம்.ரவி, திருச்சி புறநகரில் மாநில துணைச் செயலாளர் நா.பெரியசாமி, திருப்பூர் புறநகரில் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் எம்.பி., நாகையில் வை.செல்வராஜ் எம்.பி., காஞ்சிபுரத்தில் தேசியக்குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.இவீந்திரநாத், கிருஷ்ணகிரியில் டி.ராமசந்திரன் எம்.எல்.ஏ., தேனியில் க.மாரிமுத்து எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதுதொடர்பான பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

வ.எண் மாவட்டம் பங்கேற்கும் தலைவர்கள்

1 அரியலூர் அ.பாஸ்கர்

2 ராமநாதபுரம் பி.எஸ்.மாசிலாமணி

3 ஈரோடு தெற்கு சு.மோகன்குமார்

4 ஈரோடு வடக்கு கே.எம்.இசாக்

5 கடலூர் பி.துரை

6 கரூர் எம்.ரவி

7 கள்ளக்குறிச்சி எஸ்.தேவராஜன்

8 கன்னியாகுமரி க.பாரதி

9 காஞ்சிபுரம் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்

10 கிருஷ்ணகிரி டி.ராமச்சந்திரன்

11 கோயம்புத்தூர் எம்.ஆறுமுகம்

12 சிவகங்கை எஸ்.குணசேகரன்

13 செங்கல்பட்டு டாக்டர் ஏ.ஆர்.சாந்தி

14 சேலம் த.லெனின்

15 தஞ்சாவூர் தெற்கு பி.பத்மாவதி

16 தஞ்சாவூர் வடக்கு மு.அ.பாரதி

17 தருமபுரி எம்.இலகுமையா

18 திண்டுக்கல் ரா.தமிழ் பெருமாள்

19 திருச்சி புறநகர் நா.பெரியசாமி

20 திருச்சி மாநகர் எம்.செல்வராஜ்

21 திருநெல்வேலி த.இசக்கிதுரை

22 திருப்பூர் புறநகர் கே.சுப்பராயன் எம்.பி.

23 திருப்பூர் மாநகர் ஜி.மஞ்சுளா

24 திருப்பத்தூர் முத்து உத்திராபதி

25 திருவள்ளூர் எம்.ராதாகிருஷ்ணன்

26 திருவாரூர் ஜி.பழனிசாமி

27 திருவண்ணாமலை எஸ்.கலைச்செல்வன்

28 தென்காசி டாக்டர் த.அறம்

29 தென் சென்னை டி.எம்.மூர்த்தி

30 தேனி க.மாரிமுத்து

31 தூத்துக்குடி காசிவிஸ்வநாதன்

32 நாகபட்டினம் வை.செல்வராஜ் எம்.பி.

33 நாமக்கல் அ.மோகன்

34 நீலகிரி சி.சிவசாமி

35 புதுக்கோட்டை த.செங்கோடன்

36 பெரம்பலூர் பா.தினேஷ்

37 மதுரை புறநகர் டி.ராமசாமி

38 மதுரை மாநகர்

39 மத்திய சென்னை ரா.முத்தரசன்

40 மயிலாடுதுறை வை.சிவபுண்ணியம்

41 வட சென்னை மு.வீரபாண்டியன்

42 விருதுநகர் பொ.லிங்கம்

43 வேலூர் க.சந்தானம்

44 விழுப்புரம் மு.கண்ணகி

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com