

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அக்கட்சிக்கு 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. விஜய் ஆட்சியமைக்க மேலும் 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்பட்டது. ஆட்சியமைக்க அழைக்கக் கோரி கவர்னரிடம் தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்த நிலையில், பெரும்பான்மைக்கான பட்டியலை அளிக்குமாறு அவர் கேட்டிருந்தார். இந்த நிலையில் விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டிருந்தது.
இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதனையடுத்து ஆட்சியமைப்பதற்கு தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதற்கான ஆதரவு கடிதத்தை தவெக எம்எல்ஏ சிடிஆர்.நிர்மல்குமாரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வழங்கினார். கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கிடைத்துள்ளதால் தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அந்த கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.