சமுதாய வளைகாப்பு விழா

பாவூர்சத்திரத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
சமுதாய வளைகாப்பு விழா
Published on

பாவூர்சத்திரம்:

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்விபோஸ், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரிசீனித்துரை, மாவட்ட கவுன்சிலர் ரா.சாக்ரடீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மங்களநாயகி வரவேற்றார். தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு 120-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினர். சிறந்த அங்கன்வாடி பணியாளர், உதவியாளர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சண்முகதங்கவேல், வட்டார ஒருங்கிணைப்பாளர் விநாயகச்செல்வி, மேற்பார்வையாளர்கள் குழந்தை கிரேஸ், தேன்மொழி, தெய்வானை, மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், ஆய்க்குடி பேரூராட்சி தலைவர் சுந்தர்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜ்குமார், சொள்ளமுத்துமருதையா, முத்துமாலையம்மாள் மதிச்செல்வன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கணேஷ், விஜயன், வட்டார காங்கிரஸ் தலைவர் குமார்பாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்டராஜா, முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்.அறிவழகன், முன்னாள் துணைத்தலைவர் தங்கச்சாமி, தங்கேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com