சமுதாய வளைகாப்பு விழா

நீடாமங்கலத்தில் சமுதாய வளைகாப்பு விழா
சமுதாய வளைகாப்பு விழா
Published on

நீடாமங்கலம்:

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் 128 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நீடாமங்கலத்தில் நடைபெற்றது. விழாவிற்கு நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ராணி முத்துலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், நமசிவாயம், பேரூராட்சி தலைவர் ராம்ராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ராணி, சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஆனந்த், வக்கீல் கவியரசு, மாவட்ட மகளிர் அணி தலைவர் ராணி சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்ட அலுவலர் புவனேஸ்வரி வரவேற்று பேசினார். முடிவில் பயிற்றுனர் பவானி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com