சமுதாய வளைகாப்பு விழா

இளையான்குடி ஒன்றியத்தில் சமுதாய வளைகாப்பு விழாநடைபெற்றது.
சமுதாய வளைகாப்பு விழா
Published on

இளையான்குடி, 

இளையான்குடி ஒன்றியத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் சமுதாய வளைகாப்பு விழா தாயமங்கலம், சாலைக்கிராமம், பெருமச்சேரி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், மானாமதுரை எம்.எல்.ஏ.வுமான தமிழரசி ரவிக்குமார் கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தி வைத்தார். அப்போது பிறக்கும் தங்களின் குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயர் வைக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் மலைராஜ், தங்கம், சாவித்திரி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜூலி பெனிதா அனைவரையும் வரவேற்றார்.

சாலைக்கிராமத்தில் நடந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கர்ப்பிணிகளுக்கு ஒன்றிய செயலாளர் ஆறு.செல்வராஜன் பழங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கினார். பெருமச்சேரி ஊராட்சியில் கலந்து கொண்ட தமிழரசி எம்.எல்.ஏ. கர்ப்பிணிகளுடன் பல்லாங்குழி விளையாடி மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், வட்டார மருத்துவ அலுவலர் ஆரூன், ஒன்றிய செயலாளர்கள் ஆறு.செல்வராஜன், தமிழ்மாறன், வேளாண் சங்க தலைவர் தமிழரசன், ஒன்றிய கவுன்சிலர்கள் செழியன், செல்வி சாத்தையா, முருகன், மாவட்ட விவசாய அணி காளிமுத்து, தெட்சணாமூர்த்தி, தொண்டரணி புலிகுட்டி, சிவனேசன், சேதுபதிதுரை, புவியரசு, தகவல் தொழில்நுட்ப அணி கண்ணன், சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com