

உடன்குடி:
உடன்குடி புதுமனை அரசு நடுநிலைப் பள்ளியில் வட்டார பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு வட்டார கல்வி அதிகாரி ஜெயவதி ரத்னாவதி தலைமை தாங்கினார். வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் சாந்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர் ராதாகிருஷ்னன் நல்லாசிரியர் விருது பெற்ற சிறுநாடார்குடியிருப்பு ஆர்.எம்.வீ.நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பர்வதாதேவியைப் பாராட்டி நினைவுபரிசு வழங்கப்பட்டது. வட்டார கல்வி அதிகாரி, தலைமை ஆசிரியர்கள் சுபாஷ் சந்திரபோஸ், ஆல்பர்ட், பிரின்ஸ் மற்றும் பலரும் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியையை பொன்னாடை அணிவித்து பாராட்டி பேசினர்.