

சென்னை,
முரசு புயலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:-
முரசு புயலில் சிக்கி சென்னை காசிமேடு மீனவர்கள் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. அவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இத்துயரத்திற்கு பிறகும் மீன்வளத்துறை அமைச்சர் அம்மக்களைச் சந்திக்க வராதது ஏன்?.
பேரிடர் காலத்திலும் அலட்சியமாக செயல்பட்ட தவெக அரசு இத்துயரத்திற்கு உடனடியாக பொறுப்பேற்று, உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.