வல்வில் ஓரி விழாவையொட்டி வில்வித்தை போட்டி: 214 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

வல்வில் ஓரி விழாவையொட்டி வில்வித்தை போட்டி நடந்தது.
வல்வில் ஓரி விழாவையொட்டி வில்வித்தை போட்டி: 214 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவின் ஒரு பகுதியாக தென்னிந்திய அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு பிரிவு மற்றும் மாவட்ட வில்வித்தை சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த போட்டியில், தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 214 வில்வித்தை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டி இண்டியன், ரெக்கர்வ், காம்பவுண்ட் என 3 வகைகளில் 8, 10, 12, 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதுக்கு மேற்பட்டோருக்கு 7 பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில் வல்வில் ஓரி சாம்பியன் கோப்பையை செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சபரீஷ் வென்றார். இதுதவிர ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். இதில் பொன்னுசாமி எம்.எல்.ஏ., மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com