மாநில அளவிலான சிலம்ப போட்டிக்கு சிவகங்கை மாணவர் தேர்வு

மாநில அளவிலான சிலம்ப போட்டிக்கு சிவகங்கை மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.
மாநில அளவிலான சிலம்ப போட்டிக்கு சிவகங்கை மாணவர் தேர்வு
Published on: 

சிவகங்கை மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிலம்பாட்ட போட்டிகள் திருப்புவனத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் சிவகங்கை 21-ம் நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவர் ஹரி ஆதித்யா ஒற்றை கம்பு பிரிவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றார். வெற்றி பற்ற மாணவருக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராமசாமி பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். மேலும் மாணவர் ஹரி ஆதித்யாவை பள்ளி அறங்காவலர் ராணி சத்யமூர்த்தி, முதல்வர் விவேகானந்தன், ஆசிரியர்கள் கனி, சங்கீதா, பயிற்சி ஆசிரியர்கள் குமார், ரமேஷ், சாரதா ஆகியோர் பாராட்டினர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com