புகார் அளித்த நடிகை ரோகிணி... காந்தராஜ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

நடிகை ரோகிணி அளித்த புகாரின்பேரில் டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புகார் அளித்த நடிகை ரோகிணி... காந்தராஜ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Published on

சென்னை,

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு, பிரபல நடிகர்கள் பாலியல் தெல்லை அளித்தது தெடர்பாக ஹேமா கமிட்டி விசாரித்து 2019ல் அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் இடம்பெற்ற தகவல்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து தமிழ் திரை உலகிலும் பாலியல் புகார்கள் பற்றி விசாரணை நடத்துவதற்காக நடிகை ரோகிணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகை ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 6-ந்தேதி அன்று டாக்டர் காந்தராஜ் என்பவர் மீது புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், "செப்டம்பர் 7ம் தேதி யூடியூப் சேனலில் தமிழ் சினிமா நடிகைகளை பற்றி அவதூறாகவும், மோசமாகவும் டாக்டர் காந்தராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். நடிகைகளை மிகவும் கீழ்த்தரமாகவும், பாலியல் தெழிலாளி பேலவும் பேசியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. மறைந்த நடிகைகள் முதல் தற்பேதுள்ள நடிகைகள் பற்றி எந்தவித ஆதாரமும் இன்றி பேட்டியளித்துள்ளார். நடிகைகள் என்றால் கேமராமேன், எடிட்டர், மேக்கப் மேன், டைரக்டர் என அனைவரிடமும் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் தான் நடித்து வருகின்றார்கள் என்பது போல பேசியிருப்பது வேதனையளிக்கும் வகையில் உள்ளது. இதுதவிர கெச்சையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தி உள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேடு யூடியூப்பில் உள்ள அவரது பேட்டியை நீக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 296 (பொது வெளியில் ஆபாசமாக பேசுதல்), 75 (பாலியல் தொந்தரவு), 79 (பெண்களின் மாண்பை அவமதித்தல்), 352 (அவதூறாக பேசுதல்), 67 (தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல்) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com