இளம்பெண்ணை ஏமாற்றியதாக இன்ஸ்பெக்டர் மீது புகார்: 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

இன்ஸ்பெக்டர் அருண்குமாரைப் பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார்.
பணியிடை நீக்கம்
Published on

நெல்லை,

திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பணியிடை நீக்கம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்த அருண்குமார் (40), மதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய புகாரில் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணுடன் இன்ஸ்பெக்டர் அருண்குமாருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அவர் தன்னை ஏமாற்றியதாகப் பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு

இந்தப் புகாரின் அடிப்படையில், வீரவநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருண்குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். இளம்பெண்ணை ஏமாற்றியது மற்றும் அச்சுறுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், அவர் மீது மொத்தம் 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக, இன்ஸ்பெக்டர் அருண்குமாரைப் பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com