புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகார் பெட்டி
Published on

சாலையில் தேங்கும் கழிவுநீர் 

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பேரூராட்சி 3-வது வார்டு செல்லபட்டி பகுதியில் வாறுகால் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

- முத்துராஜ், செல்லபட்டி.

குண்டும் குழியுமான சாலை

கடையம் மெயின் ரோட்டில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

- அம்ஜத், முதலியார்பட்டி.

வழிகாட்டாத பெயர் பலகை

வீரகேரளம்புதூர் தாலுகா இடையர்தவணை பஸ் நிறுத்தம் அருகில் இரும்பாலான ஊர் பெயர் பலகையை சாலையோரமாக வைத்து சென்றுள்ளனர். அது துருப்பிடித்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் வெளியூர் பயணிகள் வழிதெரியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே சேதமடைந்த ஊர் பெயர் பலகையை புதுப்பித்து சாலையோரம் அமைத்திட வேண்டுகிறேன்.

- பாலமுருகன், இடையர்தவணை.

சேதமடைந்த பஸ்

தென்காசியில் இருந்து வீரகேரளம்புதூருக்கு இயக்கப்படும் அரசு பஸ் (வழித்தட எண்:-25 சி) சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த பஸ்சின் பக்கவாட்டு தகடு பெயர்ந்துள்ளதால், பஸ் வேகமாக செல்லும்போது பெயர்ந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான பஸ்சை சீரமைத்து இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?

- சிவசண்முகவேல், வீரகேரளம்புதூர்.

குடிநீர் வினியோகம் அவசியம்

சுரண்டை அருகே உள்ள குலையநேரி கீழ காலனி பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அடிபம்பு பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் வசதியின்றி பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு சின்டெக்ஸ் தொட்டி அமைத்து, பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

- குமார், குலையநேரி.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com