தினத்தந்தி புகார் பெட்டி

புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
Published on

பள்ளியின் பெயர் குறிப்பிடப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் வடக்கமேதலோடை கிராமத்தில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கல்வி பயின்று வரும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த 2 பள்ளியிலும் அதன் பெயர் குறிப்பிடப்படாமல் உள்ளது. மேலும் தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்த நிலையில் காணப்படுகிறது. எனவே இந்த 2 பள்ளிகளின் பெயர்களை குறிப்பிடவும், சுற்றுச்சுவர் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அசோக்குமார், திருப்புல்லாணி.

சாலையில் ஆக்கிரமிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா களத்தாவூர் கிராமம் அரசு தொடக்கப்பள்ளி அருகே உள்ள சாலையில் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவகடிக்கை எடுக்க வேண்டும். நக்கிரன், திருவாடானை.

நாய்கள் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் பகுதியில் ஏராளமான நாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருவித அச்சஉணர்வுடனே சாலையில் பயணிக்கின்றனர். மேலும் இவர்கள் மாற்று பாதையில் பல கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், திருவாடானை.

பணியாளர்கள் பற்றாக்குறை

ராமநாதபுரம் நகராட்சி பனைக்குளத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே இந்த அலுவலக பகுதியில் கூடுதலாக ஊழியர்களை நியமித்து அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

தரம் உயர்த்தப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் குறைந்த அளவில் உள்ளனர். இதனால் வெளிநோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து மருத்துவம் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. ஏராளமானோர் வந்து செல்லும் இந்த சுகாதார நிலையத்தை மருத்துவனையாக தரம் உயர்த்த வேண்டும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநாவுக்கரசு, திருவாடானை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com