

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பெருமாள்புரம் பகுதியில் உள்ள கோவிலின் பூஜையை அவமதித்த புகார் தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் நடிகர் ஜி.பி.முத்து மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் வீடியோ வெளியிட்டதாக கோவில் கமிட்டி தலைவர் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் நடிகர் ஜி.பி.முத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.