சாட்டை துரைமுருகன் மீது தவெக புகார்

தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் விஜய்
சாட்டை துரைமுருகன் மீது தவெக புகார்
Published on

சென்னை,

2026 சட்டமன்ற தேர்தலை குறித்து வைத்து, 'உங்கள் விஜய் நான் வரேன்' என குறிப்பிட்டு தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் விஜய். தனது பரப்புரையை கடந்த 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கிய அவர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், விஜய்யின் பரப்புரையில் பங்கேற்ற பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக நிர்வாகி இமயதமிழன் ஆன்லைனில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட காணொளியை நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com