

தூத்துக்குடி,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் உள்ளது. கந்தசஷ்டி மட்டுமல்லாமல் திருச்செந்தூர் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் என பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கிறார்கள்.
சமீபகாலமாக கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் விரைவாக தரிசனம் செய்ய வேண்டுமென்றால் சில அர்ச்சகர்கள் லஞ்சமாக பணம் பெற்றுக்கொண்டு தரிசனத்துக்கு அனுமதிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாதாரண உடையில் முகக்கவசம் அணிந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அமைச்சரின் உதவியாளரிடமே விரைவாக தரிசனம் செய்ய ஒரு நபருக்கு ரூ.1,000 வீதம் ரூ.4,000 லஞ்சம் கேட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மோசடி மற்றும் அமைச்சரிடம் லஞ்சம் வாங்கிய விவகாரம் சர்ச்சையான நிலையில் இணை மற்றும் உதவி ஆணையர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுபவர்கள் முன்ஜாமீன் கோரிய மனுதாரர்களின் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று (ஜுன் 05) விசாரணைக்கு வந்த போது நீதிபதி தனபால் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் எத்தனை பக்தர்கள் வருகின்றனர்? திருச்செந்தூர் கோவிலுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது? முறையாக வசூலிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்வது யார்?
ரூ.25 லட்சம் முறைகேட்டில் ஜாமீன் கோரியவர்களின் பங்கு என்ன? என கேள்வி எழுப்பி இந்த வழக்கில் ஜுன் 8ம் தேதி அறிக்கை அளிக்க நீதிபதி உத்தரவுட்டுள்ளார்.