சீட்டு பணத்தை தராமல் ஏமாற்றியதாக புகார்: தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

சீட்டு முதிர்வு காலம் முடிந்தநிலையில் கண்ணனுக்கு ரூ.23 லட்சத்து 91 ஆயிரத்தை கார்த்திகேயன் கொடுக்காமல் தாமதம் செய்து வந்துள்ளார்.
வழக்குப்பதிவு
Published on: 

சேலம்,

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 57). இவர், கடந்த 2021-ம் ஆண்டு பெரியேரிப்பட்டியை சேர்ந்த தாரமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் (53) என்பவரிடம் 5 சீட்டு போட்டுள்ளார்.

விசாரணை

அந்த சீட்டு முதிர்வு காலம் முடிந்தநிலையில் கண்ணனுக்கு ரூ.23 லட்சத்து 91 ஆயிரத்தை கார்த்திகேயன் கொடுக்காமல் தாமதம் செய்து வந்துள்ளார். பின்னர் ரூ.3 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.20.91 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கண்ணன் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சீட்டு நடத்தி கண்ணனிடம் ரூ.20.91 லட்சம் மோசடி செய்ததாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com