மாணவிகளிடம் பாலியல் பேரம் புகார்: பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் இன்று தீர்ப்பு

கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி பாலியல் பேரம் பேசியதாக நிர்மலாதேவி மீது புகார்கள் எழுந்தன.
மாணவிகளிடம் பாலியல் பேரம் புகார்: பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் இன்று தீர்ப்பு
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந்தேதி நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மாணவிகளிடம், போலீஸ் உயர் அதிகாரிகளிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. இன்று (வெள்ளிக்கிழமை) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com