

சென்னை,
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. மகளிர் வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் வக்கீல் ராஜலட்சுமி தலைமையில் நேற்று புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.
அதில், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி பொதுக்கூட்டம் ஒன்றில் இழிவாக பேசி உள்ளார். மேலும் பெண்களை அவமதிக்கும் வகையிலும் அவரது பேச்சு ஆபாசமாக அமைந்திருந்தது. உதயநிதி ஸ்டாலின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.