தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் “லியோ” திரைப்படத்திற்கு தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்
தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்
Published on

நடிகர் விஜய் நடித்து வெளிவரும் "லியோ" என்ற புதிய திரைப்படம் வருகிற 19-ந்தேதி வெளியிடப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு 19- ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஒரு நாளைக்கு அதிக பட்சம் 5 காட்சிகள் நடத்திக் கொள்ள தமிழ்நாடு அரசால் அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி, சிறப்பு காட்சிகள் நடைபெறும் தியேட்டர்களில், அதிக கட்டணம் வசூல் செய்தல் போன்ற விதிமீறல்கள் இருப்பின், பொதுமக்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம். மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலர் -எண்: 04364-222033, மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் - எண்: 9498100907, மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் - எண்: 9442003309, சீர்காழி வருவாய் கோட்ட அலுவலர் - எண்: 04364 270222, சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் - எண்: 9498100908, சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் - எண்: 9498100926 என்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com