கோவில்பட்டியில் முறைகேடு புகார் எதிரொலி: ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றம்


கோவில்பட்டியில் முறைகேடு புகார் எதிரொலி: ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றம்
x

கோவில்பட்டி யூனியனுக்கு உட்பட்ட துறையூர் ஊராட்சியில் 32 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வந்த செயலாளர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி யூனியனுக்கு உட்பட்ட துறையூர் ஊராட்சியில் 32 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வந்த செயலாளர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததால், அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என துறையூர் கிராம மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராமராஜ் கடந்த 25-ம் தேதி துறையூர் ஊராட்சி செயலாளர் முத்துலட்சுமியை தீத்தாம்பட்டி ஊராட்சி செயலாளராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். அவருக்கு பதிலாக கொடுக்காம்பாறை ஊராட்சி செயலாளர் கன்னியம்மாள் துறையூர் ஊராட்சி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1 More update

Next Story