எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சிபிசிஐடி சோதனை நிறைவு

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகத்தில் சிபிசிஐடி நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது.
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சிபிசிஐடி சோதனை நிறைவு
Published on

கரூர்,

ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என கருதி அ.தி.மு.க. முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். விஜயபாஸ்கரின் வீடு, நிறுவனங்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. 2 டி.எஸ்.பிக்கள், 9 ஆய்வாளர்களை கொண்ட குழு தீவிர சோதனையில் ஈடுபட்டது.

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தேடப்பட்டு வரும் நிலையில், அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமியிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகத்தில் சிபிசிஐடி நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. 8 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது சோதனை நிறைவு பெற்றுள்ளது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com