

சென்னை,
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளரும், பாடகருமானவர் தேனிசை தென்றல் தேவா. இவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். 76 வயதான தேவாவுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இசையமைப்பாளர் தேவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு திரைத்துறையினர், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இசையமைப்பாளர் தேவா உடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவா வீட்டிற்கு நேரில் வந்த முதல்-அமைச்சர் விஜய் தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக, தேவா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.