ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட கம்ப்யூட்டர் டிசைனர் கைது....!

கம்பம் அருகே ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட கம்ப்யூட்டர் டிசைனரை போலீசார் கைது செய்தனர்.
ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட கம்ப்யூட்டர் டிசைனர் கைது....!
Published on

கம்பம்,

தேனி மாவட்டம் கம்பத்தில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விட்டதாக கம்பம் சுக்காங்கல்பட்டியைச் சேர்ந்த குணசேகரன்(வயது 33) என்பவரை போலீசார் கைது. மேலும் அவரிடம் இருந்த ரூ. 87ஆயிரத்து 810 மதிப்புள்ள கள்ளநோட்டுகள் மற்றும் 2 கலர் பிரிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில்.

குணசேகரன் கம்பத்தில் உள்ள ஒரு அச்சகத்தில் கம்ப்யூட்டர் டிசைனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகள் கொரோனா தொற்றின் காரணமாக வேலை இல்லாததால் குணசேகரன் வீட்டிலேயே இருந்துள்ளார்.

பின்னர், சொந்த ஜெராக்ஸ் கடை வைப்பதற்காக கலர் பிரிண்டர்,கட்டிங் மெஷின், பேப்பர் உள்ளிட்டவைகளை விலைக்கு வாங்கி உள்ளார். இந்த பொருட்களை கடை வைப்பதற்கு வாடகை அதிகம் கேட்டதால் கடை அமைக்கும் திட்டத்தை குணசேகரன் கைவிட்டு உள்ளார். இதனால் குடும்பம் பொருளாதார பிரச்சனையில் தவித்துள்ளது.

இதனால் தான் வாங்கி வைத்திருந்த கலர் பிரிண்டரில் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து பொதுமக்கள் அதிகாமாக கூடும் இடங்களான காய்கறி மார்கெட், இறைச்சி கடைகள், மளிகை கடைகளில் புழக்கத்தில் விட்டு உள்ளார்.

இது தொடர்பாக யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க அன்றாட தேவைக்கு மட்டும் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளார். தற்போது போலீசார் நடத்திய சோதனையில் குணசேகரன் கையும் களவுமாக சிக்கி கொண்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com