தோழர் நல்லகண்ணு; தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சி: மு.க.ஸ்டாலின்


தோழர் நல்லகண்ணு; தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சி: மு.க.ஸ்டாலின்
x

தியாகத்தின் பெருவாழ்வு; தோழர் நல்லகண்ணு ஐயா 101-வது பிறந்ததாளையொட்டி அவருக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

தியாகத்தின் பெருவாழ்வு: தோழர் நல்லகண்ணு ஐயா 101-வது பிறந்ததாள்.

விடுதலைப் போராட்ட வீரராகவும், விவசாயத் தொழிலாளர்களுக்கான போராளியாகவும் திகழ்ந்து, இன்றளவும் நமக்கு வழிகாட்டும் நூற்றாண்டு நாயகர், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சியான, எண்ணற்ற இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டான தாங்கள் - நல்ல உடல்நலத்துடன் நீண்டநாட்கள் நிறைவாழ்வு வாழ்ந்திட விழைகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், தோழர் நல்லகண்ணு அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

1 More update

Next Story