மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி நாளை கண்டன ஆர்ப்பாட்டம் - இரா.முத்தரசன் அறிக்கை

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி நாளை கண்டன ஆர்ப்பாட்டம் - இரா.முத்தரசன் அறிக்கை
Published on

சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட உடல் உழைப்பு தொழிலாளர்கள், சிறு குறு தொழில்கள், விவசாயிகள் கோரிக்கைளை அலட்சியப்படுத்தி வரும் மத்திய, மாநில அரசை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 19-ந்தேதி (நாளை) நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

ஆர்ப்பாட்டத்தில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் ஊர்களுக்கு திரும்பிச்செல்ல கூடுதல் ரெயில்கள் மற்றும் பஸ்கள் இயக்கப்பட வேண்டும். அவர்களுக்கு பயண வழியில் உணவு மற்றும் குடிநீர் வழங்க வேண்டும். கொரோனா கால நெருக்கடிகளை சமாளிக்க தொழிலாளர்கள் அனைவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும். பொது வினியோகத் திட்டத்தில் நிபந்தனைகள் இல்லாமல் அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்படும்.

முககவசம் அணிந்து, ஊரடங்கு விதிமுறைகள் அனுசரித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com