மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில் வரும் 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூலை 5 ஆம் தேதி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில் வரும் 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த் அறிவிப்பு
Published on

சென்னை,

இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மத்திய மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில் வரும் 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் ஹட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்தும், கொரோன தொற்று பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கட்டுமான பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், மின்சாரம் போன்ற விலைவாசி உயர்வை கண்டித்தும் தேமுதிக சார்பில் வரும் 5 ம் தேதி காலை 10 மணியளவில், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறை அனுமதியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com