

கூடலூர் பழைய பஸ் நிலையம், கிழக்கு மெயின் பஜார் ஆகிய இடங்களில் கூடலூர் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் வாயில் கருப்பு துணிகட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு கூடலூர் நகர துணைத்தலைவர் கான் அப்துல் கபார் கான் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் சபீர் கான் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் அக்கிம் ராஜா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நகர, கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்