புதிய மின்சார சட்டத்தை கண்டித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்

புதிய மின்சார சட்டத்தை கண்டித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
புதிய மின்சார சட்டத்தை கண்டித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசின் புதிய மின்சார சட்டத்தால் இலவச மின்சாரத்திற்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அதனை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அண்ணாநகர் தபால் நிலையம் முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருநாவுக்கரசர் எம்.பி. தலைமை தாங்குகிறார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்கிறார். சென்னை அண்ணாசாலை அருகில் உள்ள தபால் நிலையம் முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு தலைமை தாங்க உள்ளார். வடபழனி தபால் நிலையம் முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா தலைமை தாங்க உள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் சமூக இடைவெளியுடன் தொண்டர்கள் பங்கு பெற்று ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com