கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரருக்கு சட்டசபையில் இரங்கல்

கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரருக்கு சட்டசபையில் இரங்கல்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 6-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. அன்றைய தினம் முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வந்தது. கடந்த 13-ம் தேதி வேளாண்மை, மீன் வளம், கால்நடை, பால்வளத்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.

இதையடுத்து 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டசபை காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டசபை தொடங்கியதும் முதலில் மேகாலயா மாநிலத்தில் கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனுக்கு இரங்கல் மற்றும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்து துயர் தணிப்பு துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com