ஓடும் பஸ்சில் கண்டக்டர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் பஸ்சில் கண்டக்டர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்
Published on

திருச்சியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ் கண்டக்டராக மோகன் (வயது 56) பயணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே பஸ் சென்றுகொண்டிருந்தபோது கண்டக்டர் மோகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு பஸ்சை கொண்டு சென்றனர். அங்கு கண்டக்டர் மோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் நெஞ்சுவலியால் கண்டக்டர் மோகன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com