

சென்னை,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு 2 நாட்கள் நடைபெற உள்ளது. 31-வது தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித்ஷா நாளை இரவு சென்னை வருகிறார்.
சென்னையை அடுத்த கோவளத்தில் பிஷர்மேன்ஸ் கோவ் ஹோட்டலில் 2 நாட்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகம், புதுவை, கேரளம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநில முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
தென் மாநிலங்களுக்கு இடையேயான உறவை சுமூகமாக பேணும் வகையில் முதல்வர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. மாநில பாதுகாப்பு, சுமூக உறவு, போதைப்பொருள் தடுப்பு, கடலோர பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.