தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

பாபநாசத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
Published on

பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார மேற்பார்வையாளர்கள் நித்தியானந்தம், நாடிமுத்து மற்றும் பணியாளர்கள் கொண்ட குழுவினர் பாபநாசம் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 12 கடைகளில் பயன்பாட்டில் இருந்தது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com