தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

குத்தாலம் பேரூராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
Published on

குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் அறிவுரையின்பேரில் துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியன், துப்புரவு மேற்பார்வையாளர் சம்பந்தமூர்த்தி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் குத்தாலம் கடைவீதி பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உபயோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் சுமார் 5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியதாக அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.3,500 அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் கூறுகையில், இனிமேல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com