தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
Published on

குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் அறிவுறுத்தலின்பேரில், துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியன், துப்புரவு மேற்பார்வையாளர் சம்பந்தமூர்த்தி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் குத்தாலம் கடைவீதி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வணிக நிறுவனங்களில் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய அந்த வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.4,500 அபராதம் விதிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com