அனுமதியின்றி பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

அனுமதியின்றி பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அனுமதியின்றி பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்
Published on

சிவகாசி, 

சிவகாசி தாசில்தார் லோகநாதன் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வருவதை தடுத்து வருகிறார்கள். இதற்காக தாலுகா முழுவதும் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருத்தங்கலை சேர்ந்த சங்கரபாண்டியன் (வயது 39) என்பவர் தனது பட்டாசு கடைக்கு எதிரில் உள்ள குடோனில் உரிய அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்த கிராம நிர்வாக அலுவலர் உமாவதி, திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சங்கரபாண்டியனை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com