250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

உச்சிப்புளி அருகே ஆற்றங்கரை கடற்கரை பகுதியில் 250 கிலோ கடல் அட்டைகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.
250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
Published on

பனைக்குளம், 

உச்சிப்புளி அருகே ஆற்றங்கரை கடற்கரை பகுதியில் 250 கிலோ கடல் அட்டைகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

கடல் அட்டைகள்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள வடக்கு கடல் பகுதியில் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர் கிராப்ட் கப்பல் ஒன்றில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரியமானுக்கும், ஆற்றங்கரைக்கும் இடைப்பட்ட கடலை ஒட்டிய கடற்கரை பகுதியில் ஏராளமான சாக்கு மூடைகள் கிடந்துள்ளது.

இதைதொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற கடலோர காவல் படையினர் சாக்கு மூடைகளை பிரித்து சோதனை செய்தனர். பிரித்து பார்த்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது. 17 சாக்கு மூடைகளில் இருந்த 250 கிலோ கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்த கடலோர காவல் படையினர் அதை மண்டபத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இலங்கைக்கு கடத்தலா?

இந்திய கடலோர காவல் படையின் கப்பலை கண்டதும் கடல் அட்டைகளை கடற்கரையில் போட்டுவிட்டு தப்பி ஓடிய நபர்கள் யார் என்பது குறித்தும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக பிடித்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com