அண்ணன்-தம்பி இடையே மோதல்

நிலத்தகராறில் அண்ணன்-தம்பி இடையே மோதல் ஏற்பட்டது.
அண்ணன்-தம்பி இடையே மோதல்
Published on

அறந்தாங்கி அருகே தேடாக்கி கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலராஜ் (வயது 41), விவசாயி. இவருடைய தம்பி தேவராஜ் (40). இவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், அண்ணன்- தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டையால் தாக்கி கொண்டனர். இதில், காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் குறித்து நாகுடி சப்-இன்ஸ்பெக்டர் வீரமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com