எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் அண்ணன் தம்பி சண்டைதான்: டிடிவி தினகரன் பேச்சு

தி.மு.க. என்கிற தீயசக்தியை ஆட்சியில் இருந்து விரட்ட கருத்துவேறுபாடுகளை மறந்து வந்துள்ளோம் என டி.டி.வி.தினகரன் பேசினார்.
எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் அண்ணன் தம்பி சண்டைதான்: டிடிவி தினகரன் பேச்சு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயிலடியில் மாலை நடைபெற்ற அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் திறந்தவேனில் நின்றபடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இன்றைக்கு நாங்கள் ஒரே வேனில் ஒன்றாக நின்று பிரசாரம் செய்வதை பார்த்து, சிலர் பயத்தின் உச்சத்தில் உள்ளனர். நாங்கள் அண்ணன், தம்பி சண்டையிட்டது உண்மைதான். ஏதே பிரச்சினை செய்தோம், சண்டையிட்டோம் தற்போது எல்லோரும் ஒன்றாக வந்துள்ளோம்.

தமிழ்நாடு முழுவதும் எங்கு சென்றாலும் எங்களை வரவேற்கிறார்கள்.சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நம் தொண்டர்களும், நிர்வாகிகளும் ஒன்றாக இணைந்துவிட்டனர். நாங்கள் தி.மு.க. என்கிற தீயசக்தியை ஆட்சியில் இருந்து விரட்ட கருத்து வேறுபாடுகளை மறந்து வந்துள்ளோம். தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சி, அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணியாக நாங்கள் இணைந்துள்ளோம்”என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com