கறிக்கோழிகளை ஏற்றி வந்த லாரி வீட்டின் மீது கவிழ்ந்தது...

பந்தலூரில் கறிக்கோழிகளை ஏற்றி வந்த லாரி வீட்டின் மீது கவிழ்ந்தது.
கறிக்கோழிகளை ஏற்றி வந்த லாரி வீட்டின் மீது கவிழ்ந்தது...
Published on

பந்தலூர்

பந்தலூர் அருகே உள்ள எருமாடு பஜாரில் இருந்து கறிக்கோழிகளை ஏற்றி லாரி ஒன்று பந்தலூர் பஜாருக்கு வந்து கொண்டு இருந்தது. நேற்று காலை 5.30 மணி அளவில் பந்தலூர் பஸ்நிலையம் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே வந்தபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அதேப்பகுதியை சேர்ந்த விஜயகுமாரின் வீட்டின் மீது கவிழ்ந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. மேலும் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். லாரி கவிழ்ந்ததில் வீடு பலத்த சேதமடைந்தது. இதுபற்றி அறிந்ததும் பந்தலூர் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கிரேன் வரவழைக்கப்பட்டு வீட்டின் மீது விழுந்து கிடந்த லாரி மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் நேற்று காலை சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி பந்தலூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com