“வாழ்த்துகள் சாம்பியன்ஸ்!”... இந்திய வீராங்கனைகளை பாராட்டிய சரத்குமார்

இந்திய வீராங்கனைகளின் சாதனைகளை பாராட்டி நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“வாழ்த்துகள் சாம்பியன்ஸ்!”... இந்திய வீராங்கனைகளை பாராட்டிய சரத்குமார்
Published on: 

சென்னை,

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியப் பெண் விளையாட்டு வீராங்கனைகள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பதிவு செய்தது மிகுந்த பெருமைக்குரிய விஷயமாகும். என சரத்குமார் பதிவிட்டுள்ளார்.

ஆசிய விளையாட்டில் 8-வது இடம்

ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக தடகளப் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது இந்திய அணி 9 தங்கம், 21 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்திய வீராங்கனைகளுக்கு சரத்குமார் வாழ்த்து

இந்த நிலையில், இந்திய வீராங்கனைகளின் சாதனைகளை பாராட்டி நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியப் பெண் விளையாட்டு வீராங்கனைகள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பதிவு செய்தது மிகுந்த பெருமைக்குரிய விஷயமாகும்.

4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம்

குறிப்பாக, பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில், ஜாம்பவான் பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்து வரலாறு படைத்துள்ள, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த திறமையான வீராங்கனை வித்யா ராம்ராஜை நான் மனதாரப் பாராட்டுகிறேன். 54.75 வினாடிகள் என்ற சிறப்பான நேரத்தைப் பதிவு செய்த வித்யா, 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பி.டி. உஷா படைத்திருந்த 55.42 வினாடிகள் என்ற நீண்டகால சாதனையை முறியடித்தார்.

இந்தச் சிறப்பிற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, கிரண், மச்செட்டிரா பூவம்மா, பிராச்சி மற்றும் வித்யா ராம்ராஜ் ஆகியோர் அடங்கிய குழு, பெண்களுக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் 3:29.69 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றது.

“இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை”

சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள இந்தச் சிறந்த வீராங்கனைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இவர்களின் மன உறுதி, அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டுத் திறன் ஆகியவை இளம் விளையாட்டு வீரர்களின் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்து, அவர்களை இன்னும் பல மகத்தான வெற்றிகளை நோக்கி அழைத்துச் செல்லட்டும்.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 8 தங்கம், 21 வெள்ளி மற்றும் 26 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களை வென்று இந்திய விளையாட்டு வீரர்கள் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்!

பதக்கம் வென்றவர்கள் மற்றும் இந்திய அணியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அவர்களின் சிறப்பான சாதனைகளுக்காக எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துகள் வெற்றியாளர்களே! பாராட்டுக்கள் இந்திய அணியே!

ஜெய் ஹிந்த்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com