பெண் சக்தியை நிரூபித்து காட்டியுள்ள கமலா ஹாரிஸ் - ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், பெண் சக்தியை நிரூபித்து காட்டியுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பெண் சக்தியை நிரூபித்து காட்டியுள்ள கமலா ஹாரிஸ் - ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
Published on

சென்னை,

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 284வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதேபோல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருவருக்கும் பல்வேறு நாட்டு தலைவர்கள், அரசியல் கட்சிகள், அமைச்சர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்கா அதிபர் தேர்தலில் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிசுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், அமெரிக்காவால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ், பெண் சக்தியை நிரூபித்துள்ளார். உலகை வெல்லும் மனநிலையுடன் இருக்கும் ஒரு தமிழ் பெண்ணின் வலிமையை அவர் மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார். உங்கள் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com