‘முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ள ராஜா சுப்ரமணிக்கு வாழ்த்துகள்’ - ஸ்ரீகாந்தி ராமதாஸ்

இந்தியாவின் பாதுகாப்பையும், முப்படைகளின் ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக செயல்படுவார் என்ற முழு நம்பிக்கை உள்ளது என ஸ்ரீகாந்தி ராமதாஸ் கூறினார்.
ஸ்ரீகாந்தி ராமதாஸ்
Published on

சென்னை,

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி என்ற மிக உயரிய மற்றும் பொறுப்புமிக்க பதவியை தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா சுப்ரமணி ஏற்றிருப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.

தலைமை தளபதி

அவரது நீண்டகால இராணுவ அனுபவம், தலைமைத்துவ திறன், நாட்டுப்பற்று மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த உயரிய பொறுப்பு அமைந்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பையும், முப்படைகளின் ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்

தமிழக மண்ணில் பிறந்து, தனது உழைப்பு, திறமை மற்றும் சேவையின் மூலம் நாட்டின் மிக உயர்ந்த இராணுவப் பொறுப்பை அடைந்திருக்கும் ராஜா சுப்ரமணி, இன்றைய இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார். அவரது இந்த சாதனை ஒவ்வொரு தமிழனும் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒன்றாகும். அவரது தலைமையில் இந்திய முப்படைகள் மேலும் வலிமை பெற்று, உலக அரங்கில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தை உயர்த்தட்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com