சிங்கப்பூர் தொழிலதிபர், திருவாவடுதுறை ஆதீனத்திடம் வாழ்த்து

திருமண நாளையொட்டி சிங்கப்பூர் தொழிலதிபர், திருவாவடுதுறை ஆதீனத்திடம் வாழ்த்து
சிங்கப்பூர் தொழிலதிபர், திருவாவடுதுறை ஆதீனத்திடம் வாழ்த்து
Published on

குத்தாலம்:

குத்தாலம் அருகே திருவாலங்காட்டை சேர்ந்தவர் சேதுராஜன். இவர் தற்பொழுது சிங்கப்பூரில் தொழிலதிபராக உள்ளார். இந்த நிலையில் சேதுராஜன் - பத்மாவதி தம்பதியினர் 21-ம் ஆண்டு திருமண நாள் கடந்த 24-ந் தேதி கொண்டாடப்பட்டது. திருமண நாளை முன்னிட்டு திருவாவடுதுறையில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளிடம் அவர் நேரில் சென்று திருமண வாழ்த்து பெற்றார். அப்போது ஆதீனம் பிரசாதங்கள் வழங்கி திருமண வாழ்த்து கூறினார்.முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் திருச்சேறையில் உள்ள சுடர் மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவர்கள் சுமார் 100 பேருக்கு இனிப்புடன் கூடிய மதிய உணவு வழங்கினார். இதில் சேதுராஜனின் மகள் ஸ்ரீவாணி கலந்துகொண்டார். இதற்கான ஏற்பாடுகளை திருவாலங்காட்டை சேர்ந்த ஜெயராஜ் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com