கலைமாமணி விருது பெற்ற ஆளுமைகளுக்கு வாழ்த்துகள் - வீரபாண்டியன் பாராட்டு


கலைமாமணி விருது பெற்ற ஆளுமைகளுக்கு வாழ்த்துகள் - வீரபாண்டியன் பாராட்டு
x
தினத்தந்தி 24 Sept 2025 5:04 PM IST (Updated: 24 Sept 2025 6:21 PM IST)
t-max-icont-min-icon

90 விருதாளர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துகளையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு கடந்த 2021, 2022 மற்றும் 2023 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவித்துள்ளது. இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் பரிசீலனை செய்து, இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக் கலைகள் மற்றும் பிற கலைப் பிரிவுகள் என ஒவ்வொரு பிரிவாக பிரித்துப் பரிசீலனை செய்து, கலைமாமணி விருது பெறும் ஆளுமைகளின் பெயர்களை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் படைப்புலகில் குறிப்பிடத்தக்க ஆளுமைகளான பேராசான் ப.ஜீவானந்தம், பாவேந்தர் பாரதிதாசன், கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் குறித்து நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியுள்ள கே.ஜீவபாரதி, அண்மையில் தொகுத்து வழங்கிய “காலம் தோறும் கம்யூனிஸ்டுகள்” தொகுப்பு நூல் வரிசையில் முதல் இரண்டு தொகுதிகள் தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பள்ளிப் பருவம் முதல் கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதை முழு நேரப் பணியாக செய்து, இயற்றமிழ் கலைமாமணி விருது பெற்றுள்ள கே.ஜீவபாரதி, திராவிட இயக்க வரலாற்று ஆய்வுப் பணிக்கு தன்னை அர்பணித்துக் கொண்டு ஆய்வாளர், வரலாற்று நூல் படைப்பாளர் க.திருநாவுக்கரசு உள்ளிட்ட 90 விருதாளர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துகளையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story